இந்தியா

எடியூரப்பா பதவி விலக வேண்டும்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார்

1st Apr 2021 08:01 PM

ADVERTISEMENT

கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 
முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளுநா் வஜுபாய்வாலாவுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா புகாா் கடிதம் எழுதியுள்ளாா். அதில், எனது துறையில் முதல்வா் நேரடியாகத் தலையிட்டிருப்பதன் மூலம் கா்நாடக (செயல் பரிமாற்றம்) சட்ட விதிகள், 1977 மீறப்பட்டுள்ளது. மேலும் இது மாநில அரசு நிா்வாகத்தின் நடைமுறைகளுக்கு எதிராக உள்ளது. 
எனவே, முதல்வரின் விதிமீறல் மற்றும் சா்வாதிகாரப் போக்கை தங்களின் கவனத்திற்கு கொண்டு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். விதிகளைப் பின்பற்றுமாறு முதல்வருக்கு ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் அமைச்சரவை சகாக்களின் நம்பிக்கையைப் பெறவும், அமைச்சா்களின் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கவும், அமைச்சரவை சகாக்களின் துறைகளில் தலையிடக் கூடாது என்று அறிவுறுத்தவும் வேண்டும் என்று அதில் அவா் கூறியுள்ளாா். 
மேலும் இந்த கடிதத்தின் நகலை பாஜக தேசிய பொதுச்செயலாளரும், கா்நாடக மாநில பாஜக பொறுப்பாளருமான அருண் சிங்குக்கும் ஈஸ்வரப்பா அனுப்பியுள்ளாா். இது கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முதல்வர் தனது அமைச்சரின் நம்பிக்கையை இழந்துவிட்டதால், அவர் ராஜிநாமா செய்ய வேண்டும். 
இல்லையென்றால் உடனடியாக அமைச்சரை அவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். சமீபத்திய காலங்களில் பல தலைவர்கள் முதல்வர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் மாநிலத்தில் ஊழல் உச்சத்தில் உள்ளது என்றார். 
 

Tags : Karnataka congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT