இந்தியா

மேற்கு வங்கம்: சுவேந்து அதிகாரி மீது தாக்குதல்

1st Apr 2021 04:46 PM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தவரும், நந்திகிராம் தொகுதி வேட்பாளருமான சுவேந்து அதிகாரியின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்த தாக்குதலை பாகிஸ்தானியர்கள் நடத்தியதாகவும், அந்தத் தொகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களே இதற்கு காரணம் எனவும் அவர் கூறினார்.

294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று (ஏப்.1) 30 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணமூல் கட்சியிலிருந்து  பாஜகவில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடும் நந்திகிராம் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பதற்றம் நிறைந்த அந்தத் தொகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதிக அளவிலான பாதுகாப்புப்படையினர், பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நந்திகிராம் தொகுதியில் மர்ம நபர்கள் தம்மை தாக்கியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். 

மேலும், கமல்பூர் வாக்குச்சாவடி அருகே ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சுவேந்து அதிகாரி புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, இந்த தாக்குதலை பாகிஸ்தானியர்கள் நடத்தியதாகவும், அந்தத் தொகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களே இதற்கு காரணம் எனவும் கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT