இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் உ.பி. அமைச்சர் பிரஜேஷ் பாதக்

1st Apr 2021 11:59 AM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேச அமைச்சர் பிரஜேஷ் பதக் வியாழக்கிழமை தனது முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். 

நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா மூன்றாம் கட்டமாகத் தடுப்பூசி இன்று முதல் செலுத்தத் தொடங்கியுள்ளது. 

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடத் தகுதியுடையவர்கள் என்று அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

மேலும், சுகாதார அமைச்சகத்தின் தவலின்படி, தடுப்பூசிக்கு http://cowin.gov.in மூலம் பதிவு செய்யலாம் அல்லது அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், நாட்டில் இதுவரை 6.43 கோடி தடுப்பூசியைச் செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
 

Tags : Uttar Pradesh Minister Brajesh Pathak COVID-19 vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT