இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குா் 

1st Apr 2021 06:52 PM

ADVERTISEMENT

மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 
நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. பிறகு மார்ச் 1ஆம் தேதி, 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட, இணை நோயுள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 
இதையடுத்து நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், இன்று தொடங்கியது. 
அதன்படி மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று, முதல் தவணையாக கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். 
 

Tags : coronavaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT