இந்தியா

மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி: ரஜினி

1st Apr 2021 01:51 PM

ADVERTISEMENT


தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்த மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால கலை சேவையைப் பாராட்டி அவருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு இன்று (ஏப்ரல் 1) காலை அறிவித்தது.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு பிரபலங்கள் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்த மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

என் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவந்த பேருந்து ஓட்டுநரான எனது நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையின் பிடியில் வாடியபோது என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த சகோதரன் சத்யநாராயணாவிற்கும்,

என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது இயக்குநர் பாலச்சந்தருக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

என்னை வாழ்த்திய தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவரும், நண்பருமான மு.க.ஸ்டாலின், நண்பர் கமல்ஹாசன், மத்திய, மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : நரேந்திர மோடி ரஜினி Rajinikanth Phalke
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT