இந்தியா

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்: பஞ்சாப் அரசு அதிரடி 

1st Apr 2021 03:38 PM

ADVERTISEMENT

 

பஞ்சாப் மாநிலத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியை அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து முதல்வர் அமரீந்தர் சிங் கூறியதாவது, 

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பெண்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்தவகையில், பஞ்சாப் அரசு (ஏப்ரல் 1) இன்று முதல் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

இந்த திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் தனது கட்சி மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. மேலும், 85 சதவீத வாக்குறுதிகளைத் தனது அரசு நிறைவேற்றியது. எல்லோரும் பெண்கள் அதிகாரம் பற்றிப் பேசுகின்றனர், ஆனால் பஞ்சாப் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

பேருந்து கட்டன விலையை 50 சதவீதம் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், பஞ்சாஙப அரசு அது முற்றிலும் இலவசமாக்கியது. மேலும் தனியார் பேருந்துக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகளைப் புரிந்துகொண்டு கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

பெண்கள் பஞ்சாப் மாநிலத்தவர் என்பதை உறுதி செய்யும் வகையில், ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை போன்றவற்றை கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் மூலம் சுமார் 1 கோடியே 30 லட்ச பெண்கள் பயனடைவார்கள். மேலும் இந்த இலவச பயணம் அரசுக்குச் சொந்தமான ஏசி, வால்வோ மற்றும் எச்.வி.ஏ.சி பேருந்துகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
 

Tags : free travel facility
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT