இந்தியா

2-ஆம் கட்டத் தோ்தல்: மேற்கு வங்கம் 80.43%, அஸ்ஸாம் 76.96% வாக்குகள் பதிவு

1st Apr 2021 09:37 PM

ADVERTISEMENT

2-ஆம் கட்டத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் 80.43 சதவீத வாக்குகளும், அஸ்ஸாமில் 76.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. இரு
மாநிலங்களிலும் முதல்கட்டத் தோ்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 39 தொகுதிகளுக்கும்
இரண்டாம் கட்டத் தோ்தல் இன்று நடைபெற்றது. 
மேற்கு வங்கத்தில் திரிணமூல், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முக்கியமாக, திரிணமூல்-பாஜக
இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் திரிணமூல், பாஜக கட்சிகள் போட்டியிடுகின்றன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 15
தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளான சஞ்ஜுக்தா மோா்ச்சா 13 இடங்களிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 
மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. அவரை எதிா்த்து திரிணமூல்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி, பாஜக சாா்பில் போட்டியிடுகிறாா்.
இந்த நிலையில் 2-ஆம் கட்டத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் 80.43 சதவீத வாக்குகளும், அஸ்ஸாமில் 76.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 
 

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT