இந்தியா

பாகிஸ்தானில் 6 பயங்கரவாதிகள் கைது

1st Apr 2021 05:49 PM

ADVERTISEMENT

 

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகளை பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பயங்கரவாத தடுப்புத் துறையின்(சிடிடி) தகவலின்படி, பஞ்சாப் மாகாணத்தின் முக்கிய நகரங்களான ராவல்பிண்டியில் நான்கு பயங்கரவாதிகள் மற்றும் லாகூரில் இரண்டு பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் கடந்த 2020-இல் ராவல்பிண்டியில் கையெறி குண்டு வெடித்ததாகவும், அதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 15 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் சட்ட அமலாக்க நிறுவனம் மற்றும் ராணுவ வீரர்களைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாக சிடிடி தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து வெடிபொருள்கள், டெட்டனேட்டர்கள், செல்போன்கள் மற்றும் போருக்கு பயன்படுத்த வைத்திருந்த பிற பொருள்களும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டனர். 

விசாரணையின் போது, பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி பெற்றுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிந்தது. மேலும் பயங்கரவாதிகள் அப்துல் கரீம் மற்றும் அப்துல் பாசித் என அடையாளம் காணப்பட்டது. 


 

Tags : Pakistan six terrorists arrests
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT