இந்தியா

ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய தாமிர உருக்காலை: வேதாந்தா நிறுவனம் திட்டம்

1st Apr 2021 04:19 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாட்டின் கடலோரப் பகுதியில் ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய தாமிர உருக்காலை அமைக்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர ஆலையானது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக அத்துறையால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த தாமிரத் தேவையில் ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தியின் பங்கு சுமார் 40%}ஆக இருந்த நிலையில், அந்த ஆலையில் மீண்டும் பணிகளைத் தொடங்குவதற்கான தீர்வுக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் தமிழக அரசிடம் தாமிரத்தை பயன்படுத்தும் தொழில் அமைப்புகள் வலியுறுத்தின. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நாட்டின் கடலோரப் பகுதியில் ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய தாமிர உருக்காலை அமைக்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 
இந்தத் திட்டம் தொடர்பாக அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் கடலோரப் பகுதியில் ரூ.10,000 கோடி மதிப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய தாமிர உருக்காலைக்கு சுமார் 1,000 ஏக்கர் நிலம் தேவை. இந்த ஆலை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். அத்துடன் அரசு கருவூலத்துக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.3,000 கோடி வருவாய் கிடைக்கும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஆர்வமுள்ள மாநில அரசுகள் விருப்பம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT