ஸ்ரீநகரில் உள்ள நௌவ்காம் பகுதியில் உள்ள பாஜக தலைவர் வீட்டின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குப்வாரா மாவட்டத்தின் பொறுப்பாளராகவும், பாரமுல்லா மாவட்டத்தில் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளராக இருக்கும் பாஜக தலைவர் அன்வர் அகமது வீட்டை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, தற்போது பாஜக தலைவர் அன்வர் பாதுகாப்பாக இருப்பதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ரமீஸ் ராஜா காயமடைந்த நிலையில், நகரில் உள்ள எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நசீர் சௌத்ரி தெரிவித்தார்.
தீவிரவாதிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த மிருகத்தனமான தாக்குதலுக்கு கட்சியின் காஷ்மீர் பிரிவு கடுமையாக கண்டிக்கிறது என்று பாஜகவின் ஊடக பொறுப்பாளர் மன்சூர் பட் கூறினார்.