இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 43,183 பேருக்கு கரோனா 

1st Apr 2021 10:11 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 43,183 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இந்தியாவிலே தினசரி கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இதனால் அங்கு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 43,183 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,56,163ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 249 பேர் பலியாகியுள்ளனர். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 54,898ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 32,641 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 24,33,368ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 3,66,533 பேர் சிகிக்சையில் உள்ளனர். 
 

Tags : Maharashtra coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT