இந்தியா

அச்சுறுத்தும் கரோனா: நாடு முழுவதும் ஒரே நாளில் 72,330 பேருக்கு தொற்று; 459 பேர் பலி

1st Apr 2021 10:41 AM

ADVERTISEMENT


புதுதில்லி: நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 72,330 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இத்துடன் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,22,21,665 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் 459 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனா். இது இந்த ஆண்டின் அதிகபட்ச தினசரி உயிரிழப்பாகும். இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,62,927 -ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் மேலும் கூறியிருப்பதாவது:

தொடா்ச்சியாக 22-ஆவது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,84,055 ஆகவும், இது மொத்த பாதிப்பில் 4.55 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. அதேசமயம் மீட்பு விகிதம் 94.11 சதவீதமாகக் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 40,382 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,14,34,301 ஆகவும், இறப்பு விகிதம் 1.34 சதவீதமாகவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும் கடந்த படிப்படியாக வேகம் பெற்று டிசம்பா் 19-இல் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது.

ADVERTISEMENT

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) படி,  நாட்டில் மாா்ச் 31-ஆம் தேதி வரை 24,47,98,621 பேரின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 11,25,681 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வியாழக்கிழமை காலை வரை நாடு முழுவதும் 6,51,17,896 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : COVID19 cases Union Health Ministry India
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT