இந்தியா

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி குறைப்பு வாபஸ்

1st Apr 2021 08:44 AM

ADVERTISEMENT

 

புது தில்லி:  மத்திய அரசின் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 1.1 சதவீதம் வரை குறைத்து புதன்கிழமை அறிவித்திருந்தது. இதற்கு அனைத்து தரப்பிலும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.  

வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி குறைக்கப்பட்டதையடுத்து 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது. 

அதன்படி, பொது வருங்கால வைப்பு நிதிக்கான (பிபிஎஃப்) வட்டி விகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.4 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான (என்எஸ்சி) வட்டி விகிதம் 0.9 சதவீதம் குறைக்கப்பட்டு 5.9 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 0.9 சதவீதம் குறைக்கப்பட்டு 6.5 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

முதல்முறையாக சேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமானது 4 சதவீதத்தில் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதமானது 1.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இரு ஆண்டுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதமானது 5 சதவீதத்தில் 0.5 சதவீதமும், 3 ஆண்டுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதமானது 0.4 சதவீதமும், 5 ஆண்டுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதமானது 0.9 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதமானது 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.9 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் இன்று வியாழக்கிழமை (ஏப். 1) முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டது. 

இனைதயடுத்து மத்திய அரசின் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித குறைப்பு நடவடிக்கைக்கு அனைத்து தரப்பிலும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. 

இந்நிலையில், மத்திய அரசின் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டது திரும்பப் பெறப்படுவதாகவும், ஏற்கனவே 2020-2021 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

Tags : withdrawn small savings schemes
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT