புது தில்லி: தில்லியிலிருந்து 45 நிமிடத்தில் மீரட்டுக்குச் செல்ல வழிவகுக்கும் தில்லி - மீரட் எக்ஸ்பிரஸ் வே சாலை இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த சாலை திறக்கப்பட்டதன் மூலமாக, இவ்விரு நகரங்களுக்கும் செல்ல இதுவரை பயண நேரம் 3 மணி நேரமாக இரந்த நிலையில், அது 45 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.
இச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இதன் மூலம் மத்திய அரசு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதாகக் கூறினார்.
ரூ.8,346 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த சாலை மூலம், போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனப் புகைகளால் எழும் காற்று மாசுபாடு பெருமளவு குறையும் என்றும் கூறப்படுகிறது.
ADVERTISEMENT