இந்தியா

உள்ளூர் மக்கள் வாக்களிக்க அனுமதி மறுப்பு: ஆளுநரிடம் மம்தா புகார்

1st Apr 2021 04:03 PM

ADVERTISEMENT

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் உள்ளூர் மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாக ஆளுநரிடம் முதல்வர் மம்தா பானர்ஜி புகாரளித்துள்ளார்.

வாக்குச்சாவடிக்கு வெளியே பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டு திரிணமூலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிவருவதாகவும் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. 

அதனைத்தொடர்ந்து இன்று (ஏப்.1) 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணமூல் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடும் நந்திகிராம் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் வாக்களிக்க பொதுமக்களை அனுமதிக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தடுப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநரிடம் தொலைபேசி வாயிலாக புகாரளித்துள்ளார்.

பொதுமக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து நந்திகிராமில் உள்ள பாயல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு மம்தா நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

பின்னர் ஆளுநர் ஜெகதீப் தாங்கருடன் தொலைபேசி வாயிலாக பேசிய அவர், ''பொதுமக்களை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் தடுப்பதாக புகார் அளித்தார். காலையிலிருந்து பிரசாரம் மேற்கொண்டு இருந்தேன். தற்போது பாயல் வாக்குச்சாவடியை நேரடியாக பார்வையிட்டேன். அவர்கள் பொதுமக்கள் வாக்களிப்பதைத் தடுக்கின்றனர். நான் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன். நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பேசினார்.
 

Tags : மேற்கு வங்கம் Mamata Banerjee
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT