இந்தியா

விடுமுறை இன்றி ஏப்ரல் முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்

1st Apr 2021 03:22 PM

ADVERTISEMENT

நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் முகாமை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் முழுவதும் அரசு அறிவிக்கும் பொது விடுமுறை நாள்களிலும்கூட கரோனா தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் ஏப்ரல் மாதம் முழுவதும் விடுமுறை இன்றி கரோனா தடுப்பூசி போடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

மார்ச் 31-ஆம் தேதி மத்திய அரசு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரரேதசங்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், நாடு முழுவதும் இருக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 16-ஆம் தேதி நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. பிறகு மார்ச் 1ஆம் தேதி, 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட, இணை நோயுள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
 

 

Tags : coronavirus vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT