இந்தியா

நாடு முழுவதும் 6.51 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

1st Apr 2021 09:25 AM

ADVERTISEMENT


புதுதில்லி: நாடு முழுவதும் 6.51 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், வியாழக்கிழமை (ஏப். 1) தொடங்குகிறது. நாடு முழுவதும் வியாழக்கிழமை காலை வரை 6.51 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 20.63 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 30.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

Tags : India Corona vaccine 6.51 crore people across
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT