இந்தியா

இந்தியாவில் கரோனா பரிசோதனை 24.47 கோடியைத் தாண்டியது

1st Apr 2021 11:13 AM

ADVERTISEMENTபுதுதில்லி: இந்தியாவின் கரோனா பரிசோதனைகள் 24.47 கோடியைத் தாண்டியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 72,330 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இத்துடன் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,22,21,665 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் 459 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனா். இது இந்த ஆண்டின் அதிகபட்ச தினசரி உயிரிழப்பாகும். இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,62,927 -ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த அதனை பரவாமல் தடுப்பதுதான் முக்கிய நடவடிக்கை என்பதால், இந்தியாவில் தினம்தோறும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) படி,  நாட்டில் மாா்ச் 31-ஆம் தேதி வரை 24,47,98,621 பேரின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 11,25,681 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

நாட்டில் மொத்தம் 2435 பரிசோதனை கூடங்கள் உள்ளன. இவற்றில் அரசு பரிசோதனை கூடங்கள் 1227, தனியார் பரிசோதனை கூடங்கள்1208.

நாடு முழுவதும் வியாழக்கிழமை காலை வரை நாடு முழுவதும் 6,51,17,896 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT