இந்தியா

மகாராஷ்டிரத்தில் சிறுவர்களை அதிகளவில் தாக்கும் கரோனா: இளைஞர்களே உஷார்

1st Apr 2021 02:50 PM

ADVERTISEMENT


மும்பை: கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பேரிடரின்போது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் கரோனா பெருந்தொற்று அதிகமாகப் பாதித்திருந்தது. அதேவேளையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் கரோனாவுக்கு பலியானார்கள்.

ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டில் கரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கிய போது, அதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல் பாதிப்பைப் போல அல்லாமல், இம்முறை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் கரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

ஏற்கனவே பெங்களூரு மருத்துவர்கள் இதனை உறுதி செய்திருந்த நிலையில், மகாராஷ்டிரத்திலிருந்து வரும் புள்ளி விவரங்களும் அதையே வழிமொழிகின்றன.

அதாவது, மகாராஷ்டிரத்தில் கரோனா நோயாளிகளில் 15,500 பேர் 10 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பதும், அதுபோல, 11 வயது முதல் 20 வயதுக்குள்பட்ட 55 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மார்ச் மாதம் கரோனா பெருந்தொற்று அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து 31 - 40 வயதுக்குள்பட்டவர்களைத்தான் பெருமளவில் தாக்கியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மார்ச் மாத மொத்த பாதிப்பில் 22 சதவீதம் அல்லது 1.34 லட்சம் பேர் என்று தெரிய வந்துள்ளது. 

பொதுவாக விகிதாச்சாரத்தில் எடுத்துக் கொண்டால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் விகிதம் ஒன்றாகவே இருப்பதாகவும், எண்களில் எடுத்துக் கொண்டால், ஜனவரியில் சிறுவர்கள் 2000 பேருக்கும், பிப்ரவரியில் 2,700 பேருக்குமாக இருந்த பாதிப்பு, மார்ச் மாதத்தில் 15,500 ஆக உயர்ந்திருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை கரோனா பாதிக்காது என்று நினைத்திருக்காமல், கரோனா தொற்றுக்கு வயதெல்லாம் தெரியாது, அனைவருக்கும் பரவக் கூடும் என்பதை மனதில் கொண்டு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியது அவசியம்.

Tags : covid coronavirus corona maharashtra
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT