ஸ்ரீநகரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் பாஜக தலைவரின் பாதுகாப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான அரிபாக் பகுதியில் பாஜக தலைவரின் அன்வர் கான் வீடு உள்ளது. இங்கு இன்று வந்த பயங்கவாதி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ரமீஸ் ராஜா மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டார். இத்தாக்குதலின் போது அன்வர் கான் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.