இந்தியா

அசாம்: முதல்முறை வாக்களித்தவர்களுக்கு செடிகள் பரிசு

1st Apr 2021 03:37 PM

ADVERTISEMENT

அசாம் சட்டப்பேரவையில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல்முறை வாக்களித்தவர்களுக்கு வாக்குச்சாவடிகளில் செடிகள் பரிசாக வழங்கப்பட்டன. 

அசாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்டப் பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்.1) 13 மாவட்டங்களிலுள்ள 39 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில், ஏராளமான மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். எனவே அவர்களை ஊக்குவிக்கும் வகையில், வாக்குச் சாவடிகளில் முதல்தலைமுறை வாக்காளர்களுக்கு செடிகள் பரிசாக வழங்கப்பட்டன. 

ADVERTISEMENT

Tags : Assam election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT