இந்தியா

அசாம்: 12 மணி நிலவரப்படி 31.80% வாக்குப்பதிவு

1st Apr 2021 12:08 PM

ADVERTISEMENT

அசாமில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் நண்பகல் 12 மணி நிலவரப்படி 31.80 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 1) 39 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் மக்கள் வாக்களித்து வரும் நிலையில், 12 மணி நிலவரப்படி 31.80 சதவிகித வாக்குப் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

அசாமில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 39 தொகுதிகளில் பாஜக 34 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. 

காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனநாயக முன்னணி 7 இடங்களிலும், போடோலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

Tags : Assam தேர்தல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT