இந்தியா

நடிகர் ரஜினிகாந்த் ஆளுமைமிக்கவர்: மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து

1st Apr 2021 09:59 PM

ADVERTISEMENT

நடிகர் ரஜினிகாந்த் ஆளுமைமிக்கவர் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். 
இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே விருது' நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில் ரஜினிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரை பக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் ஆளுமைமிக்கவர். அவரது நடிப்பிற்கும் திறமைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களோடு நானும் இணைந்து தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 
இதேபோல் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : rajini
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT