இந்தியா

கரோனா 3-ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

1st Apr 2021 11:32 AM

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

45 வயதிற்கு மேற்பட்டோர் இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கு http://cowin.gov.in மூலம் பதிவு செய்துகொள்ளலாம் அல்லது கரோனா தடுப்பூசி மையத்தையிற்கு சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 

ADVERTISEMENT

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வீசிவருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72 ஆயிரம் பேருக்குத் தொற்று பரவியுள்ளது மேலும் 459 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். 

45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியானது 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக இருக்கும். எனவே, பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 

முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் நோயுற்றவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் இதுவரை மொத்தம் 6.43 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

Tags : vaccination coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT