இந்தியா

5 மணி நிலவரம்: மேற்கு வங்கம்-71.07%, அசாம்-63.04% வாக்குப்பதிவு

1st Apr 2021 05:21 PM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 71.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோன்று அசாமில் 63.04 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 1) 39 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் மக்கள் வாக்களித்து வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.53 சதவிகித வாக்குப் பதிவாகி இருந்தன. மாலை 5 மணி நிலவரப்படி 63.04 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

இதேபோன்று மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 71.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags : மேற்கு வங்கம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT