இந்தியா

மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன

1st Apr 2021 04:21 AM

ADVERTISEMENT


புது தில்லி: பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் விமானங்கள் புதன்கிழமை இந்தியா வந்தடைந்தன. இதன் மூலம் அந்நாட்டில் இருந்து இதுவரை இந்தியா வந்து சேர்ந்துள்ள ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 14}ஆக அதிகரித்துள்ளது. 
இதுதொடர்பாக இந்திய விமானப்படை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "பிரான்ஸில் இருந்து 3 ரஃபேல் விமானங்கள் நடுவழியில் எங்கும் நிற்காமல் புதன்கிழமை மாலை இந்தியா வந்தடைந்தன. அந்த விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக விமானப் படை விமானங்கள் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டது. 
எனினும் நாட்டின் எந்தப் பகுதியில் அந்த விமானங்கள் தரையிறங்கின என்ற விவரத்தை இந்திய விமானப் படை தெரிவிக்கவில்லை. 
பிரான்ஸிடம் இருந்து ரூ.59,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 
அந்த ஒப்பந்தம் கையொப்பமாகி சுமார் 4 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ஜூலை 29}ஆம் தேதி முதல் தொகுப்பாக 5 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. 
அதன் பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 3}ஆம் தேதி இரண்டாவது தொகுப்பாக 3 ரஃபேல் விமானங்களும், கடந்த ஜனவரி 27}ஆம் தேதி மூன்றாவது தொகுப்பாக 3 ரஃபேல் விமானங்களும் இந்தியா வந்து சேர்ந்தன. 
தற்போது நான்காவது தொகுப்பாக மேலும் 3 ரஃபேல் விமானங்கள் வந்துள்ளதையடுத்து, இதுவரை இந்தியா வந்து சேர்ந்துள்ள ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 14}ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT