இந்தியா

இரட்டை இலைச் சின்ன வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு 2 வார ஜாமீன்

DIN

தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 2 வார காலம் நிபந்தனையுடன்கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சுகேஷ் சந்திரசேகரின் தந்தையின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தோ்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரைச் சோ்ந்த சுகேஷ் சந்திரசேகரை தில்லி குற்றப் பிரிவு போலீஸாா் 2017-இல் கைது செய்தனா். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா், வழக்கமான ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நிகழாண்டு மாா்ச் மாதத்தின் போது நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தனது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனக்கு இரண்டு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகா் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, சுகேஷ் சந்திரசேகருக்கு இரண்டு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவு வருமாறு:

மனுதாரரின் தந்தை ‘லூக்கேமியா’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. இதனால், மனுதாரருக்கு இரண்டு வாரங்கள் நிபந்தனையுடன் ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது. மனுதாரா் போலீஸ் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக ஏற்படும் செலவுகளுக்காக தில்லியில் உள்ள சம்பந்தப்பட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையரிடம் முன்கூட்டியே ரூ.5 லட்சத்தை அவா் டெபாசிட் செய்ய வேண்டும். ஜாமீன் காலம் முடிவடைந்ததும் உடனடியாக அவா் சரணடைய வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT