இந்தியா

'ஏழைகளுக்கும், பட்டியலினத்தவர்களுக்கும் எதிரானது யோகி ஆதித்யநாத் அரசு'

30th Sep 2020 12:19 PM

ADVERTISEMENT

ஏழைகளுக்கும், பட்டியலினத்தவர்களுக்கும் எதிரானது யோகி ஆதித்யநாத் அரசு என்று காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், ஆதிக்க சாதியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (செவ்வாய்க் கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் போராடி வருகின்றன. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்து வருகின்றனர்.

இதனிடையே உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஏழைகளுக்கும், பட்டியலினத்தவர்களுக்கும் எதிரான அரசாக உள்ளதாக  காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு குற்றவாளிகளை காக்கும் அரசாக மட்டுமே உள்ளது. ஏழை பெண்ணுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் பிரியங்கா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தொண்டனர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்காக நிற்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Tags : திக்விஜய் சிங்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT