இந்தியா

அக்.15 வரை பள்ளிகள்,கல்லூரிகள் திறப்பு இல்லை: கர்நாடக மாநில அரசு

30th Sep 2020 08:23 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு அதிகரித்து வருவதால் அக்டோபர் 15ஆம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்கப்போவதில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என கர்நாடக மாநிலப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

கரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து செப்டம்பர் 20 முதல், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆசிரியர்களைச் சந்திக்கப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரலாம் என்ற உத்தரவை மாநில அரசு தடை செய்தது. 

தொற்றுநோய் தொடர்ந்து மாநிலத்தில் அதிகரித்து வருவதால், ஆசிரியர்களைச் சந்திக்க மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வது பாதுகாப்பானது அல்ல என்று மாநில அரசு தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்புகளால் அக்டோபர் 15ஆம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்கப்போவதில்லை என கர்நாடக மாநில அரசு புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் அதன்பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karnataka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT