இந்தியா

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் வாழ்த்து

DIN

நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைசோதனை வெற்றிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா - ரஷியா கூட்டிணைப்பில் நீண்டதூரம் சென்று இலக்கைத் தாக்கும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை இன்று (புதன்கிழமை) காலை ஒடிசா மாநிலம் பாலசூர் கடற்கரையில் வெற்ரிகரமாக நிகழ்த்தப்பட்டது.

முழுக்க முழுக்க உள்நாட்டு மூலப்பொருளை கொண்டுதயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வாழ்த்துகள். உள்நாட்டு எரிபொருள் பயன்படுத்தப்பட்ட சூப்பர் சோனிக் கப்பல் ஏவுகணையின் மூலம் பாதுகாப்புத்துறைக்கான உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டுள்ளது'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைன் சதம்; கொல்கத்தா - 223/6

ஜிஎஸ்டி வரியால் ஒசூரில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன: ஆனந்த் சீனிவாசன்

தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் கே.சி.சி. நகரில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்

இன்றுமுதல் 3 நாள்களுக்கு விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த கூட்டம்

1,060 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா: ஆட்சியா்

SCROLL FOR NEXT