இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு

DIN

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யப்பட்டதை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ராமஜென்மபூமி இயக்கத்தை முன்னெடுத்த பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்பட 32 பேருக்கு மசூதி இடிப்பில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, 351 பேரிடம் விசாரணை நடத்தி, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 600 பக்க அறிக்கையை லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனடிப்படையில் 48 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இவர்களில் 16 பேர் உயிரிழந்துவிட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

மேலும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், இது திட்டமிட்ட செயல் அல்ல என்றும் நீதிபதி எஸ்.கே. யாதவ் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

சிபிஐ நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சுட்டுரைப்பதிவில் கருத்து தெரிவித்துள்ள அவர், “வாய்மையே வெல்லும். சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது. பாஜக தலைவர்கள், வி.எச்.பி.யினர், சமூக சேவையாளர்கள் பொய்யான வழக்குகளால் கண்டிக்கப்பட்டனர். இந்த சதித்திட்டத்திற்கு காங்கிரஸ் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் உள்பட 27 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT