இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 4 தீவிரவாதிகள் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல்

30th Sep 2020 12:00 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பிடிபட்ட 4 தீவிரவாதிகள் மற்றும் லஷ்கர்- இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த அவர்களது கூட்டாளிகள் 3 பேர் மீது காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

ஹந்த்வாரா பகுதியில் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் நான்கு தீவிரவாதிகளை இந்திய ராணுவம் மற்றும் மத்திய பாதுகாப்புப்படை உதவியுடன் காவல்துறை கைது செய்தது. 4 தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக அவர்களது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், இந்திய ஆயுதச் சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags : ஜம்மு-காஷ்மீர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT