இந்தியா

நாட்டின் எதிர்காலத்துக்காக வேளாண் சட்டங்களை எதிர்க்க வேண்டும்

DIN

புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகளுக்காக மட்டுமன்றி, நாட்டின் எதிர்காலத்துக்காக எதிர்க்க வேண்டும்; இந்த சட்டங்கள் விவசாயிகளின் இதயத்தில் கத்தியால் குத்தியது போன்றது என்றார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
 பல்வேறு விவசாயக் குழுவினருடன் காணொலி வாயிலாக ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை உரையாடினார். அப்போது அவர் பேசியது:
 ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு ஆகியவற்றுக்கும் இந்த 3 சட்டங்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்த சட்டங்கள் உங்களின் (விவசாயிகள்) இதயத்தில் கத்தியால் நேரடியாகக் குத்தியது போன்றதாகும். ஆனால், விவசாயிகளுக்காக மட்டுமன்றி, நாட்டின் எதிர்காலத்துக்காக இந்த சட்டங்கள் எதிர்க்கப்பட வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
 பஞ்சாப், ஹரியாணாவில் விவசாய அமைப்புகள் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னரே, இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. விவசாயிகளின் குரல் வலிமையானது. இந்தக் குரலின் உதவியுடன் இந்தியா சுதந்திரத்தை அடைந்தது. விவசாயிகளின் குரல் மூலமாக இந்தியா மீண்டும் ஒருமுறை சுதந்திரம் அடையும்.
 உத்தரபிரதேசத்தில் 2011-இல் நான் பாதயாத்திரை மேற்கொண்டபோது ஒரு கிராமத்தில் பெரிய தொழிலதிபர்கள் விவசாயிகளின் நிலத்தையும், விவசாய உற்பத்தியையும் கையகப்படுத்த விரும்பியதைப் பார்த்தேன். நிலத்தைக் கையகப்படுத்துதலுக்கு எதிராகப் போராடியதே எனது முதல் போராட்டம். அப்போது ஒட்டுமொத்த ஊடகங்களும் என்னைத் தாக்கின.
 மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அது கருப்புப் பணத்துக்கு எதிரான போராட்டம் எனக் கூறினார்கள். ஆனால், அது உண்மையல்ல. நமது அமைப்புசாரா துறை, ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களைப் பலவீனப்படுத்துவதுதான் அதன் நோக்கமாக இருந்தது என்றார் அவர்.
 ராகுலுடன் கலந்துரையாடிய விவசாயி ஒருவர், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கிழக்கிந்திய கம்பெனியை உதாரணம் காட்டினார். அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, நீங்கள் கிழக்கிந்திய கம்பெனி இருந்ததாகச் சொன்னீர்கள். இப்போது மேற்கிந்திய கம்பெனி வந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT