இந்தியா

பிகார் மாநிலத் தேர்தல்: பாஜக பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்

30th Sep 2020 09:14 PM

ADVERTISEMENT

நடைபெற உள்ள பிகார் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நியமித்து அக்கட்சியின் மத்திய தலைமை அறிவிப்பி வெளியிட்டுள்ளது.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பிகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28ல் தொடங்கும் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இந்நிலையில் பிகார் மாநில தேர்தல் பொறுப்பாளராக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தலைமை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

"நாங்கள் பிகாரில் முழு வீச்சுடன் போட்டியிடுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்.” என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : Bihar polls 2020
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT