இந்தியா

மேற்குவங்கம்: திரிணாமுல் தலைவர் மற்றும் அமைச்சருக்கு கரோனா

DIN

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோஹம் சக்ரவர்த்தி மற்றும் அமைச்சர் மந்துரம் பகிராவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற முன்களப் பணியாளர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சோஹம் சக்ரவர்த்தி மற்றும் அமைச்சர் மந்துரம் பகிரா ஆகியோருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் மந்துரம் பகிரா தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு பிறகு கல்கத்தாவில் பெல்கட்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோஹம் சக்ரவர்த்தியும் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இதற்கு முன்பு போக்குவரத்துத்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர், பேரிடர் அவசரகாலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT