இந்தியா

கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தில்லி துணை முதல்வர்

DIN

கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சிகிச்சை முடிவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்று பாதித்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த மணீஷ் சிசோடியாவுக்கு அதிக காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால், உடனடியாக தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் செப்டம்பர் 23ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

பின் தில்லி மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் மணீஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டதால் வீடு திரும்பினார். சிசோடியா ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT