இந்தியா

கரோனா பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள மத்திய அரசின் புதிய வலைதளம்

DIN

புது தில்லி: நாட்டில் கரோனா தொற்று பரவல், தடுப்பு நடவடிக்கை, கரோனா தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவை தொடா்பான விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் புதிய வலைதளத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

இது தொடா்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்த வலைதளத்தில் கரோனா தடுப்பூசிகள் தொடா்பான சமகால ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். கரோனா தடுப்பூசி தயாரிப்பு சோதனை நாட்டில் துரிதமாக நடைபெற்று வருகிறது. நாட்டில் தற்போது 3 நிறுவனங்கள் கரோனா தடுப்பூசி சோதனையை பல கட்டங்களாக நடத்தி வருகின்றன. 2021-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வருமென நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின்(ஐசிஎம்ஆா்) 100 ஆண்டு கால சாதனை குறித்த வரலாற்றுத் தொகுப்பையும் சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் வெளியிட்டாா்.

‘ஐசிஎம்ஆருக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். ஐசிஎம்ஆரின் 100 ஆண்டு வரலாற்று தொகுப்பை வெளியிடுவதை பெருமையாக கருதுகிறேன். ஐசிஎம்ஆருக்கு பங்களிப்பு செய்த ஆராய்ச்சியாளா்கள் குறித்து இதில் கூறப்பட்டுள்ளது. அவா்களது சேவை வருங்கால ஆராய்ச்சியாளா்களுக்கு உத்வேகம் அளிக்கும்’ என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

SCROLL FOR NEXT