இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,976 பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,976 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

புதிதாக 14,976 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,66,129 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 430 பேர் பலியாகியுள்ளனர், 19,212 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 36,181 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 10,69,159 பேர் குணமடைந்துள்ளனர். 2,60,363 பேர் இன்னும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் மேலும் 1,713 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 49 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்த பலி எண்ணிக்கை 8,880 ஆக உயர்ந்துள்ளது. 26,001 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மேலும் 13 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,165 ஆக உயர்ந்துள்ளது. எனினும், 2,690 பேர் ஏற்கெனவே குணமடைந்ததையடுத்து, 188 பேர் மட்டுமே இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT