இந்தியா

மகிழ்ச்சியான செய்தி: அவசரப்பட்டு உடல் எடையைக் குறைக்க வேண்டாம்

DIN

ஹைதராபாத்: நாட்டில் ஆண் மற்றும் பெண்ணின் சிறந்த உடல் எடையை 5 கிலோ அளவுக்கு தேசிய ஊட்டச்சத்து கல்வி நிறுவனம் (என்ஐஎன்) உயர்த்தியுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட இந்தியர்களின் சிறந்த உடல் எடையில் தற்போது 5 கிலோ அளவுக்கு உயர்த்தி தேசிய ஊட்டச்சத்து கல்வி நிறுவனம் (என்ஐஎன்)  அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய ஆணின் சிறந்த உடல் எடை என்பது 2010-ஆம் ஆண்டில் இருந்த 60 கிலோவில் இருந்து தற்போது 65 ஆகவும், இந்தியப் பெண்ணின் சிறந்த உடல் எடை என்பது 50 கிலோவில் இருந்து 55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதோடு சேர்த்து, இந்தியர்களின் சிறந்த உயரமும் சற்று உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய ஆணின் சிறந்த உயரம் என்பது முன்பு 5.6 அடியாகவும் (171 செ.மீ.), பெண்ணின் சிறந்த உயரம் 5 அடியாகவும் (152 செ.மீ.) இருந்தது. இது தற்போது ஆணுக்கு 5.8 அடியாகவும் (177 செ.மீ.) பெண்ணுக்கு 5.3 அடியாகவும் (162 செ.மீ.) உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடல் எடை மற்றும் உயரம் என்பது இனி, சாதாரண உடல் நிறைக்கு அளவீடாகக் கருதப்படும்.

இந்த மாற்றத்துக்குக் காரணம் குறித்து விஞ்ஞானிகள் விளக்குகையில், தற்போது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெறும் நகர்ப்புற மக்களின் தரவுகள் மட்டுமே புள்ளி விவரங்களுக்கு சேகரிக்கப்படும். தற்போது ஊரக மற்றும் நகர்ப்புற மக்களின் தரவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதால், அதற்கேற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வயது வந்த இந்தியர்களுக்கான வரம்பு தற்போது 19 - 39 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2010-ஆம் ஆண்டு 20 - 39 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூரில் 85 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

ரோட்டரி சத்தி டைகா்ஸ் சங்க ஆய்வுக் கூட்டம்

வெப்ப அலை: வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு ஆட்சியா் வேண்டுகோள்

அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவரிடம் ரூ.1.13 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT