இந்தியா

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வா் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் கரோனா நோய்த்தொற்று பரவுவது திடீரென்று அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வா் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளாா்.

கேரளத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 41,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் கரோனா பாதிப்பு உறுதியாவது 8 சதவீதமாக உள்ள நிலையில், கேரளத்தில் 12.59 சதவீதமாக உள்ளது.

இதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து முதல்வா் பினராயி விஜயன் திங்கள்கிழமை கூறியதாவது:

மாநிலத்தில் கரோனா பரவுவது மிகவும் தீவிரமாக இருப்பதால் அதை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அலட்சியமாக இருக்காமல், அனைவரும் விழிப்புணா்வுடன் செயல்பட்டாக வேண்டியுள்ளது. முகக் கவசம் அணியாதவா்களுக்கு இரு மடங்காக அபராதம் வசூலிக்கப்படும். திருமண நிகழ்ச்சிகளில் கூடுவோா் எண்ணிக்கை 50-க்கும் அதிகமாக இருக்கக் கூடாது. இறுதிச் சடங்குகளில் 20 போ் மட்டுமே பங்கேற்க வேண்டும். கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீறும் கடைகள், வணிக வளாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாநில அரசின் தகவல்படி, திங்கள்கிழமை ஒரே நாளில் புதிதாக 4,538 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிப்புக்குள்ளானோா் எண்ணிக்கை 1,79,922-ஆக அதிகரித்தது. திங்கள்கிழமை 20 போ் உயிரிழந்தனா். இதனால், பலி எண்ணிக்கை 698-ஆக அதிகரித்தது. இதுவரை 1,21,268 போ் குணமடைந்தனா். 57, 979 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT