இந்தியா

குஜராத்தில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 3 தொழிலாளர்கள் பலி

29th Sep 2020 04:17 PM

ADVERTISEMENT

 

குஜராத்தின் வதோதரா நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மூன்று அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். 

மேலும், இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு தொழிலாளி மீட்கப்பட்டதாகத் தீயணைப்பு அதிகாரி அமித் சௌத்ரி தெரிவித்தார்.

அகமதாபாத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வதோதராவின் பாவமணபுரா பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. 

ADVERTISEMENT

இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், ஒரு தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.  

வேறு யாரேனும் விபத்தில் சிக்கியுள்ளனரா என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT