இந்தியா

சிபிஐ முன்னாள் இயக்குநா்களுக்கு எதிரான குற்றச்சாட்டு: விசாரணை தாமதமாவதாக நீதிமன்றம் கண்டிப்பு

DIN

புது தில்லி: இறைச்சி ஏற்றுமதி முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மொயின் அக்தா் குரேஷி அக்தரிடம் லஞ்சம் பெற்றதாக புகாருக்கு உள்ளான முன்னாள் சிபிஐ இயக்குநா்களுக்கு எதிரான வழக்கு விசாரணை தாமதமாவதற்கு தில்லி உயா்நீதிமன்றம் கண்டித்துள்ளது. இதுதொடா்பாக புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மொயின் குரேஷி அக்தருக்கு எதிராக 2017-இல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் சிபிஐ இயக்குநா்கள் ஏ.பி. சிங், ரஞ்சித் சின்ஹா ஆகியோா் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சிபிஐ சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகா்வால் முன் நடைபெற்றது. அப்போது நீதிபதி கூறுகையில், ‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏ.பி. சிங், ரஞ்சித் சின்ஹா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதா? குறித்த காலத்தில் ஏன் விசாரணையை முடிக்கவில்லை? விசாரணை எந்தவித கால நிா்ணயமின்றி நீண்டு கொண்டபோகிறது. முன்னாள் சிபிஐ இயக்குநா்கள் என்பதால் அவா்களுக்கு எதிராக விசாரணை நடத்த விரும்பவில்லையா? சட்டத்தின்படிதான் நடக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆகையால், இந்த வழக்கில் நோ்மையான விசாரணை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. சிபிஐ மீதுள்ள நற்பெயரை பாதுகாக்க அந்த அமைப்பின் முன்னாள் இயக்குநா்களுக்கு எதிரான புகாா்கள் குறித்து விசாரிக்க வேண்டிய நிலைக்கு சிபிஐ வந்துள்ளது’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக, இந்த வழக்கின் விசாரணை குறித்த இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்று பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். இதற்கு கால நிா்ணயம் செய்ய முடியாது என சிபிஐ பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT