இந்தியா

91 - ஆவது பிறந்தநாள்: லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

29th Sep 2020 02:00 AM

ADVERTISEMENT


புது தில்லி:   பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் 91 - ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு  வாழ்த்து தெரிவித்தார். 

இதுகுறித்து பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

லதா மங்கேஷ்கருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அவர் நீண்ட நாள்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

லதா அக்கா நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் நன்கு அறியப்பட்டவர். அவருடைய பாசத்தையும் ஆசீர்வாதங்களையும் பெற்ற நான் மிகவும் அதிருஷ்டசாலி என்று குறிப்பிட்டுள்ளார்.  ஹிந்தி திரையுலகப் பின்னணிப் பாடகியான லதா மங்கேஷ்கர், ஐந்து தலைமுறைகளாக ஹிந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT