இந்தியா

நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு 70 ஆயிரமாகக் குறைந்தது

29th Sep 2020 09:31 AM

ADVERTISEMENT

 

நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் என்ற அளவில் பதிவாகிவந்த நிலையில், செவ்வாய்க்கிழமையான இன்று காலை கரோனா பாதிப்பு 70 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

மேலும், நாட்டில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 61.45 லட்சமாக இருக்கும் நிலையில், அவர்களில் 51 லட்சம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டனர். இது மொத்த பாதிப்பில் 83 சதவீதமாகும்.

நாட்டில் திங்கள்கிழமை காலை 82,170 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 70,589 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து, நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 61 லட்சத்தைத் தாண்டியது.

ADVERTISEMENT

நாட்டில் புதிதாக கரோனா பாதித்தோர் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், நாட்டில் புதிதாக 70,589 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் மொத்த பாதிப்பு 61,45,292 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, கரோனா பாதித்து 776 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் கரோனா பாதித்து 9,47,576 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 51,01,398 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 96,318 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நோக்கி அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT