இந்தியா

2ஜி மேல்முறையீட்டு வழக்கு: விரைந்து விசாரிக்கக் கோரிய சிபிஐ மனுவிற்கு ஒப்புதல்

DIN

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரிய மனு மீது தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுதலை செய்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிா்த்து மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கப் பிரிவு மூலம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 2ஜி மேல்முறையீட்டு வழக்கு நீண்ட நாட்களாக விசாரிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் அதனை விரைவாக விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

இதனையொட்டி அக்டோபர் 12க்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் தில்லி உயர்நீதிமன்றம் சிபிஐயின் கோரிக்கையை ஏற்று வழக்கை முன்கூட்டியே விசாரிக்க தில்லி உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நாள்தோறும் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் சிபிஐயின் கோரிக்கை ஏற்கப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

கோவில்பட்டியில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

SCROLL FOR NEXT