இந்தியா

மிசோரத்தில் 25 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 50 பேருக்குத் தொற்று

PTI

மிசோரத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 25 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட மேலும் 50 பேர் புதிதாக தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஐஸ்வால் மாவட்டத்தில் நாற்பத்து மூன்றும், லுங்லேயில் ஏழு பேருக்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

இதில், மத்திய ரிசர்வ் காவல் படையில்(சிஆர்பிஎஃப்) பதினான்கு பேரும், எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எஃப்) ஏழு பேரும், அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் இந்திய விமானப்படையில் (ஐஏஎஃப்) ஒருவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

மிசோரத்தில் 211 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 499 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் 1,459 பேர் தொற்று பாதித்து குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் 74.52 சதவீதமாக உள்ளது. 

திங்கள்கிழமை மாலை வரை மொத்தம் 75,552 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT