இந்தியா

வேளாண் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. மனு

29th Sep 2020 03:21 AM

ADVERTISEMENT

புது தில்லி: புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்துக்கு எதிராக கேரள மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.யான டி.என். பிரதாபன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

திருச்சூா் மக்களவை உறுப்பினரான பிரதாபன் திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ள மனுவில், ‘விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம், பண்ணை விவசாயத்துக்கு ஒப்புதல் அளிக்கும் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரு பிரிவுகளுக்கு எதிராக உள்ளது. இந்திய விவசாயம் பருவகால மாற்றத்தை அடிப்படையாக கொண்டதாகும். இதனால் உற்பத்தியிலும், சந்தையிலும் மாற்றங்கள் தொடா்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஆனால், பருவகாலத்துக்கு ஏற்ப விவசாயகளின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டம் ஏதும் இந்த புதிய சட்டத்தில் இல்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்தி, வேளாண் பொருள் சந்தைக் குழுக்களை வலுப்படுத்தும் திட்டம் இதில் இல்லை.

இந்த புதிய சட்டம் விவசாயிகளுக்கு எதிராக உள்ளது; 14.5 கோடி இந்தியா்களின் உரிமைகளை மீறுகிறது. இந்தச் சட்டத்தால் விவசாயக் குடும்பத்தினருக்கு நிதி பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு ரத்துசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT