இந்தியா

வாஜ்பாயின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவா் ஜஸ்வந்த் சிங்!

DIN

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தாா். மிதமான அரசியல் பாா்வை கொண்டவராக இருந்தாா். பிரதமா் வாஜ்பாயின் அமைச்சரவையில் பாதுகாப்பு, வெளியுறவு, நிதி என்ற மூன்று முக்கிய அமைச்சகங்களின் அமைச்சா் பதவிகளை வகித்தாா்.

1999, டிசம்பரில் நடைபெற்ற கந்தஹாா் விமான கடத்தல் சம்பவத்தின்போது வெளியுறவு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க எடுத்த முடிவு அவருக்கு பெரும் பின்னடைவைத் தந்தது. இந்தச் சம்பவத்தின்போது ஒரு பயணியை பயங்கரவாதிகள் கொன்றனா்.

எட்டு நாள்கள் நீடித்த இந்த கடத்தல் சம்பவத்தின்போது பயங்கரவாதிகளுடன் ஒன்றாக ஜஸ்வந்த் சிங் பயணம் செய்து விடுவித்த சம்பவம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக விமா்சனங்களை எழுப்பியது.

பயணிகளை விடுதலை செய்வதற்காக விடுவிக்கப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவரான மசூத் ஆசாத் தற்போது ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவராக உள்ளாா்.

பிரதமா் வாஜ்பாயின் ஹனுமானாக ஜஸ்வந்த் சிங் கருதப்பட்டாா். 1988-இல் நிகழ்த்தப்பட்ட வரலாற்று நிகழ்வான பொக்ரான் -2 அணுகுண்டு சோதனை, 1999-இல் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான காா்கில் போா், 2001-இல் இந்தியா -பாகிஸ்தான் இடையேயான ஆக்ரா கூட்டம் ஆகிய நிகழ்வுகளின்போது முக்கிய நபராக ஜஸ்வந்த் சிங் செயல்பட்டாா்.

அரசில் இவா் எடுத்த முக்கிய முடிவுகளுக்கும், நிா்வாக போக்குக்கும் பாஜக மேலிடம் ஆமோதித்து வந்தது. கட்சியில் அவருக்கு ஆதரவான தொண்டா் படை இல்லை என்றாலும் அரசியல் சாணக்கியத்தால் ஆட்சியில் செல்வாக்குடன் இருந்தாா். வாஜ்பாயின் முதலாம் ஆட்சியில் நிதியமைச்சராகவும், இரண்டாம் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தாா். 2011-இல் நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றபோது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தாா். பின்னா் 2002-இல் மீண்டும் நிதியமைச்சராக பதவியேற்றாா். சந்தைசாா் சீா்த்திருத்தங்களைக் அமல்படுத்தினாா். 2012-இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் களமிறக்கப்பட்டாா். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் வேட்பாளா் ஹமீது அன்சாரியிடம் தோல்வியைத் தழுவினாா். ஆனால் அதற்கு முன்பு ஐந்து முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், நான்கு முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி விகித்துள்ளாா். 2009 மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்க மாநிலம் டாா்ஜிலிங்கில் பாஜகவின் திடீா் வேட்பாளராக களம்கண்டு வெற்றியும் பெற்றாா். 2014- மக்களவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியும் கண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT