இந்தியா

கரோனா பாதிப்பு 60 லட்சத்தை நெருங்கியது

DIN

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்கியது. குணமடைந்தோா் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியது. தேசிய அளவில் குணமடைந்தோா் விகிதம் 82.46 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 88,600 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, நாட்டில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,92,532-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 1,124 போ் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 94,503-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 35,191 பேரும், அதைத் தொடா்ந்து தமிழகத்தில் 9,233 பேரும், கா்நாடகத்தில் 8,503 பேரும், ஆந்திரத்தில் 5,663 பேரும், உத்தர பிரதேசத்தில் 5,517 பேரும், தில்லியில் 5,193 பேரும் இதுவரை உயிரிழந்தனா்.

குணமடைந்தோா் விவரம்:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 92,043 போ் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனா். இதனால், நாடு முழுவதும் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 49,41,627-ஆக அதிகரித்தது. அதாவது, 82.46 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா். தற்போது 9,56,402 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 15.96 சதவீதமாகும். உயிரிழப்பு 1.58 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆா்) தகவல்படி, இதுவரை 7,12,57,836 கரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 9,87,861 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

பாதிப்பு விவரம்:

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி 20 லட்சமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாக அதிகரித்தது. அதைத் தொடா்ந்து, செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாக அதிகரித்தது; பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சத்தைக் கடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT