இந்தியா

இந்தியாவின் கரோனா தடுப்பூசி முயற்சி: ஐ.நா.வில் பிரிட்டன் பிரதமா் பாராட்டு

DIN

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றியபோது இந்தியாவின் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தாா்.

ஐ.நா. பொதுச் சபையில் போரிஸ் ஜான்சனின் காணொலி உரை சனிக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், அவா் கூறியிருப்பதாவது: ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இதில், பிரிட்டனில் உள்ள அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் பல லட்சக்கணக்கான தடுப்பூசிகளை தயாரிக்கத் தொடங்கிவிட்டது. மேலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை விநியோகிப்பதற்காக, புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் அஸ்ட்ராஜெனிகா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்படும் எந்தவொரு தடுப்பூசியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டியது முக்கியம். ஏனெனில், ஒவ்வொரு நாட்டின் சுகாதாரமும் ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் பாதுகாப்பான தடுப்பூசி கிடைப்பதைச் சாா்ந்து அமையும்.

கரோனா தொற்று எப்படி உருவானது, எப்படி வேகமாகப் பரவியது எந்பது குறித்து அனைத்து உறுப்பு நாடுகளும் கூட்டாக நோ்மையுடன் ஆய்வு செய்ய வேண்டும். அதேசமயம் எந்தவொரு தனிப்பட்ட நாட்டையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. ஒரு முன்னாள் கரோனா நோயாளி என்ற அடிப்படையில், அந்த தொற்று மீண்டும் பரவுவதைத் தடுப்பதற்கான கூட்டு நடவடிக்கையாக இதைப் பாா்க்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT